மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

103 வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடி!

103 வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடி!

நீலகிரியில் மிக குறைந்த வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு ஆரம்பித்துவிட்டது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்துமுடிக்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இந்த முறை 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்துவித விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. கொரோனா காலம் என்பதால், அதற்கு ஏற்ற வகையில் வாக்குச்சாவடிகளில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீலகிரியில் மூன்று தொகுதிகளில், 5.80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள மூன்று தொகுதிகளிலும் 868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நீலகிரியில் குறைந்த வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடி மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் குந்தா லோயர் கேம்ப் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் 52 ஆண்கள், 51 பெண்கள் என மொத்தம் 103 வாக்காளர்களே உள்ளனர்.

கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிங்காரா கேம்ப் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் 61 ஆண்கள் மற்றும் 65 பெண்கள் என 126 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பில்லூர்மட்டம் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் 83 ஆண்கள் மற்றும் 89 பெண்கள் என 172 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

அதிகபட்சமாக குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சுங்கம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் 525 ஆண்கள் மற்றும் 529 பெண்கள் என மொத்தம் 1054 வாக்காளர்கள் உள்ளனர்.

ஊட்டி தொகுதியில் அரசு ஆரம்ப பள்ளி இடுஹட்டி வாக்குச்சாவடியில் 523 ஆண், 525 பெண் வாக்காளர்கள் என, 1048 வாக்காளர்கள் உள்ளனர்.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 6 ஏப் 2021