மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

தேர்தல்: இலவச சவாரி வழங்கும் ஊபர்!

தேர்தல்: இலவச சவாரி வழங்கும் ஊபர்!

ஏப்ரல் 6ஆம் தேதி முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக ஊபர் நிறுவனம் 5 கி.மீ வரை இலவச சவாரி வழங்குகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தபால் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தபால் வாக்குகளை பெறும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க விரும்புவோர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது ஜனநாயகக் கடமையை செய்வதற்கு உதவ முன் வந்துள்ளது ஊபர் நிறுவனம்.

இல்லத்திலிருந்து அவர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச சவாரி சேவையைத் தர ஊபர் நிறுவனம், இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது.

வருகின்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இலவச சவாரி சேவையை ஊபர் நிறுவனம் வழங்க உள்ளது.

மேற்கண்ட வாக்காளர்களுக்கு அவர்களது வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்குச் சென்று திரும்பும் வகையில், இலவச சவாரியானது, குறைந்தபட்சம் 5 கி.மீ. தூரத்திற்குட்பட்டு பயணக் கட்டண அளவில் ரூ.200 வரை 100 சதவீதக் கட்டணத் தள்ளுபடியுடன் அளிக்கப்படும்.

பயணம் செய்வோர் கைப்பேசியின் மூலம் "ஊபர்" செயலி (Uber App) வழியாக இலவச பயணத்துக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விருப்பத்தின்பேரில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.

வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 5 ஏப் 2021