மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

நாளையும் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம்!

நாளையும் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம்!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அளவுக்கு அதிகமாக சுட்டெரித்து கொண்டிருக்கிறது. கோடை காலத்தின் உச்சமான, அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்கவில்லை. ஆனால், வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

நேற்று தர்மபுரி, திருப்பத்தூர்,வேலூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது.

இந்நிலையில், இன்றும் நாளையும், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

அதனால், பொதுமக்கள், விவசாயிகள் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம். முடிந்தளவு வெள்ளை கலரில் காட்டன் துணியை அணிந்து கொள்ள வேண்டும். அதிகளவில் தண்ணீர் குடிக்கவும், குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 60% முதல் 80% வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாக இருக்கும், அதிகமாக வியர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், விவசாய நிலங்களில் வேலை பார்ப்பவர்கள், ஆடு , மாடுகள் மேய்ப்பவர்களால் அதை தவிர்க்க முடியாது. மனிதர்கள் மட்டுமில்லாது விலங்குகளும் வெயிலினால் அவதிப்படுகின்றன. கடுமையான வெயிலை எதிர்கொள்வதனால் மயக்கம், வறட்சி,தலைசுற்றல், குமட்டல், உடலில் அதிக சூடு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

வெயிலின் கொடுமை ஒரு பக்கம் இருக்கும்போது, சில பகுதிகளில் குறிப்பாக மதிய வேளைகளில் மின்சாரம் கட் செய்யப்படுகின்றது. ஏற்கனவே வெயிலினால் வியர்வையும், புழுக்கமும் அதிகமாக இருக்கிறபோது, மின்சாரம் இல்லாததால், வெக்கையும், வியர்வையும் அதிகமாகி வீட்டிற்குள்ளே இருக்க முடிவதில்லை. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், திரும்ப திரும்ப தாகம் ஏற்படுகிறது. என்றைக்கு இந்த வெயிலின் தாக்கம் குறையுமோ என மக்கள் எதிர்பார்த்து தவித்து கொண்டிருக்கின்றனர்.

வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

திங்கள் 5 ஏப் 2021