மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

கல்யாண வீடு போல் மாறிய வாக்குச்சாவடி!

கல்யாண வீடு போல் மாறிய வாக்குச்சாவடி!

புதுச்சேரியில் மாதிரி வாக்குப்பதிவு மையங்கள் திருவிழா வீடுகள் போல் காட்சியளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தைப் போன்று, புதுச்சேரியிலும் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் வாகன வசதியும் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோடை காலம் என்பதாலும், வெயிலினை தவிர்க்கும் வகையில் வாக்களர்கள் நிழலில் நிற்க வசதியாக மேற்கூரை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

அதுபோன்று வாக்காளர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று வாக்களிக்கும் வகையில் அடையாள குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன.

வாக்காளர்களை கவரும் வகையிலும், 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதி செய்யவும் பல்வேறு செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் திருவிழா வீடு போல அலங்கரிக்கப்பட்ட மாதிரி வாக்குப்பதிவு மையங்களை இன்று(ஏப்ரல் 5) அம்மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் பார்வையிட்டார்.

இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகள் கூறுகையில், ” சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து வாக்காளர்களை வரவேற்போம். வாசலில் வாழைமரத் தோரணம் கட்டப்படும். வாக்குசாவடிகள் பலூன்களால் கட்டி அலங்கரிக்கபட்டுள்ளன. சுபநிகழ்வு நடக்கும் இல்லங்களை போன்று வாக்குச்சாவடிற்குள்ளே மக்கள் வரும்போது பன்னீர் தெளித்து வரவேற்போம்” என தெரிவித்துள்ளனர்.

அதுபோன்று, தமிழகத்தில் கோவை மாவட்டத்தில், நாளை இயல்பை விட வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க சாமியானா பந்தல் போடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில வாக்குச்சாவடி மையங்கள் வண்ண வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், பெண் ஊழியர்கள் மட்டுமே பணிபுரியும் 10 வாக்குச்சாவடிகள், ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 5 ஏப் 2021