மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

அதிக புகார்கள் வந்த தொகுதி: தலைமை தேர்தல் அதிகாரி!

அதிக புகார்கள் வந்த தொகுதி: தலைமை தேர்தல் அதிகாரி!

தமிழகத்தில் ‛சி விஜில்' செயலி மூலமாக கரூர் தொகுதியில் அதிகளவு தேர்தல் விதி மீறல் புகார்கள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று(ஏப்ரல் 5) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழகத்தில் நாளை ஏப்ரல் 6ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் 4,17,521 தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க பிபிஇ கிட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் வெப்பநிலை பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விவிபாட் இயந்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.428.46 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்கள் வழங்கப்படும். பூத் சிலிப்கள் இல்லை என்றாலும் பெயர் இருந்தால் உரிய ஆவணங்களுடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கலாம். பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு என பிரத்யேகமான பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். ‛சி விஜில்' செயலி மூலமாக கரூர் தொகுதியில் அதிகளவு தேர்தல் விதி மீறல் புகார் வந்துள்ளது.

பணம் பறிமுதல் செய்யப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவை நிறுத்துவது குறித்து தோ்தல் ஆணையமே இறுதி முடிவை எடுக்கும் அதேசமயம், பணம் பறிமுதல் தொடா்பான அனைத்து விவரங்களையும் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தோ்தலில் வாக்குக்குப் பணம் அளிப்பதை கட்டுப்படுத்த தோ்தல் ஆணையம் கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவுக்கு முன்பாக பணம் பட்டுவாடா செய்யப்படும் என்ற சந்தேகம் இருப்பதால் இரவு, பகலாக தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென மாவட்ட தோ்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும், வாக்குக்குப் பணம் கொடுப்பது தொடா்பாக 1950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் மக்களே புகார் தெரிவிக்கலாம். புகார்களை எந்த நேரத்திலும், எப்போது தெரிவித்தாலும் உடனடியாக சம்பவ இடத்துக்குப் பறக்கும் படையினர் வருவார்கள் என தெரிவித்துள்ளார்

-சக்தி பரமசிவன்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

திங்கள் 5 ஏப் 2021