மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

கொரோனா : வாக்குப்பதிவு குறையுமா?

கொரோனா : வாக்குப்பதிவு குறையுமா?

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாளை நடைபெறுகிற வாக்குபதிவில் வாக்குசதவிகிதம் குறையுமோ என்ற கவலை அரசியல்கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு தேர்தல் பிரச்சாரத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல், மக்கள் கூடியது தான் காரணம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். முகக்கவசங்கள் அணியவும் கொரோனா விதிமுறைகள் பின்பற்ற

எவ்வளவோ சொல்லியும், பொது மக்களும், அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளவில்லை. தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும் வகையில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் ஆணையமும் ஒதுங்கி நின்றதால், அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனினும், தேர்தல் முடிந்த உடனே கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசின் அனைத்து துறைகளும், எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள், தலைவர்கள், தொண்டர்கள் பலருக்கும் கொரோனா தாக்கம் ஏற்பட்டு, அவர்கள் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு வெப்பப் பரிசோதனை செய்யப்படும். ஓவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்; சமூக இடைவெளியில் வரிசையில் நின்றுதான் வாக்களிக்க வேண்டும் என ஆணையம் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நெருக்கடியான பல காரணங்களால், கடந்த சட்டசபைத் தேர்தலை காட்டிலும் இந்த முறை வாக்குப்பதிவு குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 வயதைக் கடந்தவர்கள் கூட, கொரோனா பரவல் அச்சம் காரணமாகவும், வெயில் காரணமாகவும் ஓட்டளிக்க வர மாட்டார்கள் என்ற அச்சம் முக்கிய கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

'ஐம்பது வயதை கடந்த வாக்காளர்கள் தமிழகத்தில் 1.70 கோடி வரை இருப்பார்கள் என தோராயமாக கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர், பிரதான கட்சிகளுக்கு ஓட்டளித்து வந்தவர்கள். அதனால், ஓட்டுப்பதிவு சதவிகிதம் குறையும்போது, அது ஆட்சியமைக்கப்போகும் அதிமுக , திமுக-வுக்குத்தான் பாதிப்பாக அமையும்' என, அக்கட்சிகள் நினைக்கிறது. தொகுதிகளில் மறைமுகமாக

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களை, கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையோடு, வீட்டில் இருந்து ஓட்டுச்சாவடிக்கு அழைத்துச் செல்லும் வேலையை செய்யலாம் என சில கட்சிகள் முடிவெடுத்திருக்கிறதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தேர்தலில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து ஓட்டுப்போட செல்ல வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் நாளான நாளை ஏப்ரல் 6 ஆம் தேதி முகக்கவசம் இல்லையெனில் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் படிப்படியாக உயர்ந்து 85 ஆயிரம் சோதனைகளில் 3,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமானோர் கூடும் கலாசார நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சக்தி பரமசிவன்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 5 ஏப் 2021