மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

ஏப்ரல் 6 -14 ... சிறப்பு பிரச்சாரம் : பிரதமர்

ஏப்ரல் 6 -14 ... சிறப்பு பிரச்சாரம் : பிரதமர்

100 சதவீதம் முகக்கவசம் அணிதல், பொது மற்றும் பணியிடங்களில் சுகாதாரமாக இருத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் வரும் 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1,03,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனாவுக்கு 478 பேர் இறந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் மொத்த கொரோனா தொற்று பாதிப்புகளில் 57 சதவிகிதம் மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ளது. இங்கு தினசரி பாதிப்பு 49,913 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்புகளில் பஞ்சாப் 4.5 சதவிகிதமும், சட்டீஸ்கர் 4.3 சதவிகிதமும் உள்ளது. இந்த மூன்று மாநிலங்களை தவிர, கர்நாடகா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், குஜராத்,டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. புதிய தொற்று பாதிப்பில் 10 மாநிலங்கள் 91 சதவீத பங்கு வகிக்கிறது. அதிக பாதிப்புகள் ஏற்படும் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த பாதிப்புகளில் 91.4 சதவீதமும், மொத்த உயிரிழப்புகளில் 90.9 சதவிகிதமும் பதிவாகியுள்ளன.

ஞாயிற்றுகிழமை மாலை 8.30 மணியளவு வரை இந்தியாவில் 7.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், 6.5 கோடி பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுள்ளனர். மீதமுள்ள 1 கோடி பேர் இரண்டு டோஸையும் போட்டு கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணியின் கள நிலவரம் ஆகியவை குறித்து, பல்வேறு துறை செயலர்கள் உட்பட மூத்த அதிகாரிகளுடன் நேற்று(ஏப்ரல் 4) பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள், பரி சோதனை வசதிகளை அதிகரிக்கவும், ஆக்சிஜன் சிலிண்டர், வெண்ட்டிலேட்டர்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பொது சுகாதார நிபுணர்கள் அடங்கிய மத்திய குழுக்களை அனுப்ப வேண்டும்.

தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்த தினசரி ஆய்வை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பின்னூட்டமாக பகிர்ந்து கொண்டு, அதற்கேற்ப சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கொரோனா பரிசோதனை, பாதிக்கப்பட்ட வர்களுடன் தொடர்பில் இருந் தவர்களை கண்டறிதல், சிகிச்சை, விதிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் தடுப்பூசி செலுத்தல் ஆகிய 5 அம்சங்களை முறையாக தீவிரமாக கடை பிடித்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

தொற்று அதிகரித்து வருகிற நிலையில், அலட்சியமாக முகக்கவசத்தை அணியாமல் இருப்பது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது, தொற்று பரவும் பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பதில் மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ள சுணக்கம் ஆகிய மூன்று காரணங்களால்தான் கொரோனா பரவல் அதிகரித்ததற்கு காரணம். நோய் பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

பொது மற்றும் வேலை செய்யும் இடங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றுதல், சுகாதாரமாக இருத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் வரும் 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் தேவையான பரிசோதனைகளையும், கடுமையான கட்டுப்பாடுகளையும் மாநிலங்கள் எடுக்க வேண்டும்.

கடந்த 15 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா மேலாண்மை நடவடிக்கைகளின் பயன்கள் சிதையாமல் இருக்கும் வகையில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் திட்ட இலக்குடன் கூடிய அணுகுமுறையை தொடர்ந்து பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம்

கடந்த 10 நாட்களாக சென்னையில் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 3.61 சதவிகிதத்திலிருந்து, 9.13 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சென்னையில் நாள்தோறும், 14 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடைபெறுகிறது. பரிசோதனையில் பத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. அதனால், ஏப்ரல் 7ஆம் தேதிக்கு பிறகு சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை இன்னும் அதிகமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய நடவடிக்கைகள் அமலுக்கு வந்தவுடன் ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிடும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்ணாநகர் - 928, தேனாம்பேட்டை - 839, கோடம்பாக்கம் - 741, அம்பத்தூர்- 732, ராயபுரம் - 682, திருவிக நகர் - 631, அடையார் - 543, வளசரவாக்கம் -526 தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

திங்கள் 5 ஏப் 2021