மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு ?

தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு ?

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு என்று பரப்பப்படும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், பதற்றமடைய வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் இன்று(ஏப்ரல் 5) தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”வரலாற்றிலேயே முதல் முறையாக தேர்தல் பணிகளில் சுகாதார பணியாளர்களும் இணைகின்றனர். அதன்படி,ஒரு வாக்குச்சாவடிகளில் இரு சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கொரோனா காலத்தில் தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் சுகாதாரத் துறையிடம் கேட்டுக் கொண்டதின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் முகக்கவசம், சானிடைசர், கவச உடை உள்ளிட்டவை அடங்கிய 13 கிட் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்றுள்ளவர்கள், பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காலம் என்பதால் மக்கள் முகக்கவசம் அணிந்து, குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றி வாக்களிக்க வேண்டும்.

ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்வர்.பல அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை செய்யப்படுவதால் ஒரே மருத்துவமனைக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் வந்தால் அலட்சியமாக இருக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். மகாராஷ்டிரா போன்று, தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

ஏப்ரல் 7ஆம் தேதிக்கு பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் அதிகமாக்கப்படுமே தவிர, முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம். அதனால் பதற்றமடைய வேண்டாம் .

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்துவது வருத்தம் அளிக்கிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஏப்ரல் 7ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி போடுவது தொடர்பாக விழிப்புணர்வு பரப்புரை செய்யப்படும்” என கூறினார்.

வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 5 ஏப் 2021