மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

நக்சலைட் தாக்குதல்: வீரர்களுக்கு அமித்ஷா அஞ்சலி!

நக்சலைட் தாக்குதல்: வீரர்களுக்கு  அமித்ஷா அஞ்சலி!

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வீரவணக்கம் செலுத்தினார்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா- பிஜப்பூர் மாவட்ட எல்லைக்கு இடையே உள்ள காட்டுப் பகுதியில் நக்சல்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மாநில போலீசார், துணை ராணுவ படையினர், கோப்ரா சிறப்பு படையினர், மாவட்ட ரிசர்வ் போலீசார் என 1,500 வீரர்கள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த காட்டுப்பகுதியை சுற்றி வளைத்து, பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் மூன்று பக்கம் சுற்றி வளைத்து வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடும், வெடிகுண்டு வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 22 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். 31 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேமாதிரி, நக்சலைட்டுகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அசாமில் உடனடியாக பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக டெல்லி திரும்பினார்.

இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(ஏப்ரல் 5) அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகலுடன் இணைந்து நக்சலைட்டுகளுடனான மோதல் நடைபெற்ற சுக்மா-பிஜப்பூர் பகுதியை பார்வையிட்டார். பின்னர் இருவரும் ஜக்தல்பூரில் வீர மரணம் அடைந்த 14 பாதுகாப்பு படையினருக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். மேலும் படுகாயமடைந்த ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமித்ஷா.

இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகையில், ” உயிர்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நான் உறுதி அளிக்க விரும்புகிறேன். நாட்டுக்காக வீரர்கள் செய்த தியாகங்கள் வீண் போகாது. இன்னும் அதிக பலத்துடனும், விடாமுயற்சியுடனும் நக்சலைட்டுகளுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும். விரைவில் இதற்கு ஒரு முடிவு கொண்டு வருவோம்.

வீரர்களின் உடல்கள் தேடும் பணி நடைபெற்று இருப்பதால், தற்போதைக்கு உயிரிழப்பு பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்று கூறினார்.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 5 ஏப் 2021