மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: மீன் சூப்

ரிலாக்ஸ் டைம்: மீன் சூப்

பருவநிலை மாற்றங்களுக்கு ஏதுவாக நாவுக்கு இதமளித்து நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் சூப் வகைகளில் மீன் சூப்பும் ஒன்று. இன்று வித்தியாசமான, சுவையான இந்த மீன் சூப் செய்து ரிலாக்ஸ் டைமில் அருந்துங்கள். புத்துணர்ச்சி பெறுங்கள்.

எப்படிச் செய்வது?

முள் நீக்கிய மீன் துண்டுகள் நான்கைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஆறு சின்ன வெங்காயம், ஐந்து பூண்டு பற்கள், ஒரு துண்டு இஞ்சியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகிய மூன்றையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று ஏலக்காய், சிறிதளவு பட்டை ஆகியவற்றை போட்டு கொதிக்கவிடவும்.

கொதிக்க தொடங்கியதும் மீன் துண்டுகள். தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்க்கவும். மீன் துண்டுகள் நன்கு வெந்ததும் சிறிதளவு பிரியாணி இலை, வெங்காயத்தாள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

சிறப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

திங்கள் 5 ஏப் 2021