மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

இங்கிலாந்தின் சிவப்புப் பட்டியலில் பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் சிவப்புப் பட்டியலில் பாகிஸ்தான்!

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பாகிஸ்தான் உட்பட நான்கு நாடுகளை இங்கிலாந்து அரசு பயணத் தடை பட்டியலில் சேர்த்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இதுவரை 43 லட்சத்து 64,547 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 27,006 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இங்கிலாந்தில் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளை இங்கிலாந்து சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதன்படி, இந்த நாடுகளில் இருந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டு மக்களைத் தவிர்த்து பிறர் வருவதற்குத் தடை விதிக்கப்படும்.

இந்தப் பயண தடையானது, வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி காலை 4 மணியில் இருந்து அமலுக்கு வரும் என அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

இதற்குப் பின்னர் அந்த நாடுகளிலிருந்து வருகிற இங்கிலாந்து மக்கள் 10 நாட்கள் கட்டாயம் ஹோட்டல்களில் தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பாகிஸ்தான் தற்போது 31ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 4 ஏப் 2021