மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மது விற்பனை!

ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மது விற்பனை!

சட்டமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வழக்கமான விற்பனையை விட நேற்று ஒரே நாளில் 30 சதவீதத்திற்கு மேல் அதிகமாக விற்பனை நடந்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிற சட்டமன்றத் தேர்தலையொட்டி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஏப்ரல் 7- ஆம் தேதி காலை வரை மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை அமைதியாக நடத்தவும், அசாம்பாவிதங்களை தவிர்க்கவும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேர்தல் நடைபெறுவதால் ஒருவருக்கு 5 மது பாட்டில்களுக்கு மேல் விற்ககூடாது என்றும், ஒவ்வொரு கடையிலும் வழக்கமான விற்பனையை விட 30 சதவீதத்துக்கு மேல் விற்பனை அதிகரிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதால், மது பிரியர்கள் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்கூட்டியே மதுபானங்களை வாங்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஒரேநாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.160 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. வழக்கமாக ஒரு நாளைக்கு ரூ.100 முதல் 120 கோடி வரைதான் விற்பனை நடக்கும். இது வழக்கமான விற்பனையை விட 30 சதவீதம் அதிகமாகும்.

தேர்தல் முடிந்து வரும் ஏப்ரல் 7- ஆம் தேதி அன்று மதியம் 12.00 மணிக்கு மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன

வினிதா

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

ஞாயிறு 4 ஏப் 2021