மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

பெட்ரோல், டீசல் விலை குறையும்!

பெட்ரோல், டீசல் விலை குறையும்!

பெட்ரோல், டீசல் விலை இன்னும் சில நாட்களில் குறையும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது மத்திய அரசு நிர்னயித்து வருகிறது. அதன்படி மாநிலங்களில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. சமையல் சிலிண்டரும் விலை உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து இன்று(ஏப்ரல் 4) மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,, ”பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை இப்போது குறைய தொடங்கியுள்ளன, அவை வரும் நாட்களில் மேலும் குறையும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால், மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்க செய்வோம் என்று முன்னமே கூறியிருந்தோம்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, நாடு எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை 85 சதவிகிதம் சார்ந்து இருப்பதால், சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையிலேயே விலை நிர்வகிக்கப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை மத்திய அரசு குறைக்காது என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுக் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கும் நிதி தேவைப்படுவதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58க்கும், டீசல் விலை ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஞாயிறு 4 ஏப் 2021