மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

சுகாதார பணியாளர்கள் தடுப்பூசிக்கு பதிவு செய்ய முடியாது!

சுகாதார பணியாளர்கள் தடுப்பூசிக்கு பதிவு செய்ய முடியாது!

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டு கொண்டவர்கள் தவிர, புதிதாக தடுப்பூசி போட்டுக் கொள்ள சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களின் புதிய பதிவுகளை இனி அனுமதிக்க வேண்டாம் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்ட பின்னர், மார்ச் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை ,அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில கொரோனா தடுப்பூசி மையங்களில் தகுதி பெறாத சில பயனாளிகள், தங்களை சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் என பதிவு செய்யப்பட்டு, வழிமுறைகளை மீறி தடுப்பூசி போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கான புதிய தடுப்பூசி பதிவுகள் எதுவும் அனுமதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதை அமல்படுத்த வேண்டும். 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் கொரோனாவுக்கான பதிவு கோவின் போர்ட்டலில் தொடர்ந்து அனுமதிக்கப்படும். அதன்படி ஏற்கனவே தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ள சுகாதார, முன்களப் பணியாளர்களும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் தேவையில்லை*

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டிக் கொண்டிருக்கிற நிலையில், மாநிலத்தில் கொரோனா தொற்று இல்லாததால் மக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என அசாம் சுகாதாரத் துறை அமைச்சரும் பாஜக தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

”கோவிட் 19 ஏற்கனவே அசாமை விட்டு வெளியே சென்றுவிட்டது. அதற்குபிறகும், ஏன் மக்கள் முகக்கவசம் அணிந்து பீதியை உருவாக்க வேண்டும் .

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு பின்பற்ற அறிவுறுத்தலாம். ஆனால் அசாமில் இன்றைய நிலவரப்படி, கொரோனா தொற்று இல்லை. கொரோனா திரும்பவும் வந்தால், அப்போது நான் மக்களை முகக்கவசம் அணிய சொல்கிறேன்.

மக்கள் முகக்கவசம் அணிந்தால், அழகு நிலையங்கள் எவ்வாறு இயங்கும்? அழகு நிலையங்களும் செயல்பட வேண்டுமல்லவா? அதனால், மக்கள் கொஞ்ச காலம் நிம்மதியாக இருக்கலாம். மாநிலத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருப்பதாக நான் உணரும்போது, மக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய உத்தரவிடுவேன். அப்போது அதை அவர்கள் மீறினால் ரூ .500 அபராதம் விதிக்கப்படும்” என அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

ஞாயிறு 4 ஏப் 2021