மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: அவல் வெஜிடபிள் கட்லெட்!

ரிலாக்ஸ் டைம்: அவல் வெஜிடபிள் கட்லெட்!

கோடைக்காலத்தில் அவல் வகைகளை உணவில் சேர்ப்பது உடல் எடையைk குறைக்கவும், நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையவும் உதவியாக இருக்கும். இன்று சண்டே ஸ்பெஷலாக ரிலாக்ஸ் டைமில் இந்த அவல் வெஜிடபிள் கட்லெட் செய்து பரிமாறலாம். நாள் முழுக்கப் புத்துணர்ச்சிப் பெறலாம்.

எப்படிச் செய்வது?

பெரிய வெங்காயம் ஒன்று, கொத்தமல்லி சிறிதளவைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கப் அவலை அலசி 10 - 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி நறுக்கிய வெங்காயம், தோல் சீவி நறுக்கிய காய்கறி (கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட்) அரை கப், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து வேகவிடவும். இத்துடன் ஊறிய அவல், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துப் புரட்டி கொத்தமல்லித்தழை, இரண்டு சோள மாவு சேர்த்துக் கிளறி அடுப்பை நிறுத்தவும்.

இந்தக் கலவையை சிறு உருண்டைகளாகப் பிடித்து ரஸ்க் தூளில் புரட்டி விருப்பமான வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்துகொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சூடாக்கி அவல் கட்லெட்டைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகப் வேகவைத்து எடுத்து சாஸுடன் பரிமாறவும்.

சிறப்பு

* எளிதில் செரிமானமாகும்.

* உடனடி எனர்ஜி தரும்.

* உடல்சூட்டைத் தணிக்கும்.

* செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும்.

* உடல் எடையைக் குறைக்கும்.

* இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

ஞாயிறு 4 ஏப் 2021