மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் சஸ்பெண்ட்!

லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் சஸ்பெண்ட்!

சென்னையில் சுயேச்சை வேட்பாளரிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் எந்தெந்த பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும் என்பதை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என்பது விதிமுறை.

அந்த மனு ஆய்வு செய்யப்பட்டு, அனுமதி கொடுத்ததற்கான உத்தரவு அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பப்படும். வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் தேர்தல் பரப்புரைக்குச் செல்லாத வகையிலும் வேறு ஏதேனும் பிரச்சினை ஏற்படாத வகையிலும் காவல்துறையினர் ஆலோசித்து வேட்பாளர்களுக்கு வேறு வேறு நேரத்தை ஒதுக்கி தருவார்கள். இதற்கான உத்தரவு காவல்துறையிடமிருந்து அந்தந்த வேட்பாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் டிவி ரிமோட் சின்னத்தில் கிருஷ்ணதாசன் என்பவர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இந்த நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் பரப்புரை செய்ய அனுமதி கேட்டு காவல்நிலையத்துக்கு போன் செய்துள்ளார். அப்போது, அங்குள்ள தலைமை காவலர் குணசேகரன் என்பவர், ரூ.1,000 கொடுத்தால், உடனடியாக அனுமதி பெற்று தருகிறேன் என்று கூறியிருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்த கிருஷ்ணதாசன், உடனடியாக காவலர் லஞ்சம் கேட்ட ஆடியோவை திருவல்லிக்கேணி தேர்தல் அலுவலரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் மீது திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, தலைமை காவலர் குணசேகரனைக் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி பின்னர் பணியிடை நீக்கம் செய்து கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 4 ஏப் 2021