மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - பிளாஸ்டிக் பாட்டிலில் மோர் கொண்டு போறீங்களா?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - பிளாஸ்டிக் பாட்டிலில் மோர் கொண்டு போறீங்களா?

கோடையோடு கொரோனாவையும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் எல்லோரும். வழக்கத்தைவிட இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமாமே என்பதில் தொடங்கி, கோடையில் நோய் எதிர்ப்புத் திறன் கூடுமா என்பதுவரை சம்மர் குறித்த சந்தேகங்கள் ஏராளம்...

குறிப்பாக... எந்த வேளைக்கு எந்த உணவைச் சாப்பிடுவது?

காலை உணவைப் பொறுத்தவரை முந்தைய தலைமுறையினர், முதல்நாள் சமைத்த கம்பு, அரிசி சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்து சாப்பிடுவார்கள். இதில், நல்ல பாக்டீரியா இருக்கும் என்பதால் உடலுக்கு நல்லது. நீர் வறட்சியும் சரியாகும். அதே போல நாமும் சாப்பிடலாம்.

அது பிடிக்காதவர்கள் இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றைச் சாப்பிடலாம்.

11 மணியளவில் காபி, டீக்குப் பதில் இளநீர், நீர், பானகம் குடிக்கலாம். ஏனென்றால், இது வெயில் ஏறும் நேரம் என்பதால் குளிர்ச்சியாகக் குடிப்பது நல்லது.

மதியம், இரவு உணவுகளில் மூன்று விஷயங்கள் இருக்க வேண்டும். ஒன்று அல்லது ஒன்றரை கப் சாதம், அடுத்து, அரை கப் பருப்பு. மூன்றாவது, ஒன்றரை கப் காய்கறிகள். அவரைக்காய், காராமணி, செளசெள. பூசணிக்காய் போன்றவை இருக்கலாம்.

எண்ணெய் அதிகம் பயன்படுத்தாமல் சமைக்க வேண்டும். மோர் இருப்பது நல்லது. மாலை நேரத்தில் பஜ்ஜி, பக்கோடா போன்ற அதிக எண்ணெய் பொருள்களைச் சாப்பிடாமல் இருப்பதே நல்லது. அதற்குப் பதில் உலர் பழங்களைச் சாப்பிடலாம்.

கர்ப்பிணிகளின் உடல்சூடு இயல்பாகவே அதிகமாக இருக்கும். இது கோடைக்காலம் என்பதால் இன்னும் அதிகரிக்கக்கூடும். அதனால், அவர்கள் இளநீர், நீர் மோர் போன்றவை அதிகம் குடிக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு அதிகம் பானகம் கொடுக்கக் கூடாது. எந்த உணவாக இருந்தாலும், காரமும் எண்ணெயும் குறைவாகச் சேர்த்து சமைத்ததைச் சாப்பிடலாம்.

அடுத்து... பிளாஸ்டிக் பாட்டிலில் மோர் கொண்டு போகலாமா?

கோடைக்காலத்துக்கு மிகவும் ஏற்ற பானம் மோர். ஆனால், மோரை பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி, கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் குடிப்பது தவறான பழக்கம்.

ஏனென்றால், புளிப்பு மிக்க உணவுப் பொருளை பிளாஸ்டிக்கில் ஊற்றும்போது, அது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக்கொள்ளும். எனவே, பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றப்பட்ட மோரைக் குடிக்கும்போது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக் குடிக்கிறோம். அதற்கு ஜீனோ பயாக்டிஸ் (Xeno biotics) என்று பெயர்.

எந்தெந்தப் பொருள்களை பிளாஸ்டிக்கில் வைக்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை அரிசி, பருப்பு இவை மட்டுமே பிளாஸ்டிக் கன்டெயினரில் வைக்கலாம் என்று அறிவியல் கூறுகிறது. உப்பு, ஊறுகாய் என எதுவும் வைக்கக் கூடாது.

அப்படித்தான் மோரும். காலையில் வைக்கும் மோரில் நேரமாக, புளிப்பு ஏற, ஏற அது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக்கொள்ளும். அதற்குப் பதில் எவர்சில்வர் பொருட்களைப் பயன்படுத்தலாம்.

முக்கியமாக... தண்ணீரை அலட்சியப்படுத்தாதீர்கள்!

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் என்பதால் பெண்கள் தொடங்கி வயதானவர்கள் வரை தண்ணீர் குடிப்பதைக் குறைப்பார்கள். இதனால் அவர்களுக்கு எளிதில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு, உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். எனவே, கோடைக்காலத்தில் தினம்தோறும் 2 - 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். கோடையிலும் கொதித்து, ஆறவைத்த நீரையே குடிக்க வேண்டும்.

சிலர் வெயில் நேரத்தில் வெளியே சென்றுவிட்டு வந்ததும் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட தண்ணீரை உடனே எடுத்துக் குடிப்பார்கள். உடல் வெப்பமாக இருக்கும்போது உடனே குளிர்ந்த நீரைப் பருகும்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் வரலாம்.

பெருந்தொற்று காலத்தில் இதுபோன்ற தொற்றுகள் அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட நீரில் கிருமிகள் சேர்வதற்கும் வாய்ப்புள்ளது. அதன் மூலமாகவும் தொற்று ஏற்படலாம். கவனம்.

நேற்றைய ஸ்பெஷல்: சோயா பெப்பர் ஃப்ரை

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 4 ஏப் 2021