மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

வழக்கமான ரயில் சேவை சாத்தியமா?

வழக்கமான ரயில் சேவை சாத்தியமா?

கொரோனாவுக்கு முன்பு இருந்த வழக்கமான ரயில் சேவை எப்போது தொடங்கும் என்றும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில் சேவையும் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் கடைசியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் ரயில் சேவையும் முடங்கியது. பின்னர் மே மாதம் முதல் படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. சிறப்பு ரயில்களாக பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அப்படி சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டாலும் தற்போதைய நிலையில் வெறும் 66 சதவிகித ரயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 77 சதவிகித மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ்கள், 91 சதவிகித புறநகர் ரயில்கள், 20 சதவிகிதப் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கொரோனாவுக்கு முன்பு இருந்த வழக்கமான ரயில் சேவை எப்போது தொடங்கும் என்றும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில் சேவையும் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் நிலவி வருகிறது

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “அடுத்த இரண்டு மாதங்களில், சிறப்பு ரயில்களுடன் கொரோனாவுக்கு முந்தைய சேவைகள் தொடங்கும். எனினும் இது மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் கொரோனா பரவல் நிலையைப் பொறுத்தது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் எந்த அளவு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டதோ அந்த அளவுக்கு தற்போது மின்சார ரயில்கள் முழுமையாக இயக்கப்படுகின்றன. தினமும் மூன்று லட்சம் பயணிகள் இதில் பயணம் செய்கின்றனர். கொரோனாவுக்கு முன்பு எந்த அளவு மக்கள் பயணம் செய்தார்களோ அந்த அளவுக்குத் தற்போது பயணம் செய்ய தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 3 ஏப் 2021