மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

ஜிஎஸ்டி வசூலில் சாதனை: மார்ச் மாத வசூல் ரூ.1.24 லட்சம் கோடி!

ஜிஎஸ்டி வசூலில் சாதனை: மார்ச் மாத வசூல் ரூ.1.24 லட்சம் கோடி!

ஜிஎஸ்டி மூலம் கடந்த மார்ச் மாத வசூல் ரூ.1.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை இந்தியா முழுவதும் 2017 ஜூலை 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளைவிட 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வசூலாகியிருப்பதே அதிகபட்ச தொகையாகும்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் வெகுவாகக் குறைந்தது. தளர்வுகள் அறிவித்தபின் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்க தொடங்கியது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த மாதம் (மார்ச் 1ஆம் தேதியில் இருந்து மார்ச் 31ஆம் தேதி வரை) மொத்த ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சத்தை தாண்டி 1,23,902 கோடி ரூபாய் வசூலானதாக வருவாய்த்துறை அறிவித்துள்ளது. தொடா்ந்து ஆறாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

மத்திய ஜிஎஸ்டி 22,973 கோடி ரூபாய், மாநில ஜிஎஸ்டி 29,329 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி 62,842 கோடி ரூபாய் மற்றும் செஸ் 8,757 கோடி ரூபாய் வருவாய் வசூலிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது

இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 27 சதவிகிதம் அதிகமாகும். தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்து வரும் நிலை மார்ச் மாதமும் நீடித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

சனி 3 ஏப் 2021