மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

கொரோனா: பாதிப்பு 3446, 14 பேர் பலி!

கொரோனா: பாதிப்பு  3446, 14 பேர் பலி!

தமிழகத்தில் நேற்று 3290 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று(ஏப்ரல் 3) 3446 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,96,226 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1834 பேர் குணமாகி இன்று வீடு திரும்பியதையடுத்து, குணமானவர்களின் எண்ணிக்கை 8,63,258 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 20,204 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் நேற்று 12 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12,764 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,52,431 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் 285 பேரும், கோவையில் 292 பேரும், திருவள்ளூரில் 201 பேரும், தஞ்சையில் 138 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

சனி 3 ஏப் 2021