மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

கொரோனா பரவல் பொறுத்து கட்டுப்பாடுகள்!

கொரோனா பரவல் பொறுத்து கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் கொரோனா பரவலை பொறுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தமிழக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், சுகாதார செயலாளர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து இன்று(ஏப்ரல் 3) தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்தியாவில் 11 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகள், சூழலுக்கேற்ப கட்டுப்பாடுகள் அதிகமாக்கப்படும்.

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் மெத்தனப் போக்காக இருப்பது கொரோனா பரவல் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஏப்ரல் 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் 31.75 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு 54,78,720 கொரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 846 ஆக உயர்ந்துள்ளது. இந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் 100% RT-PCR பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பற்றிய தகவல்களை பெற 104 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு இல்லாத நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது சவாலானது. தொற்று அதிகரிக்கும் விகிதம் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கிறது என மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா எச்சரித்துள்ளார்.

வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 3 ஏப் 2021