மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

தேர்தல்: 3 நாட்களில் 2.63 லட்சம் பேர் பயணம்!

தேர்தல்: 3 நாட்களில் 2.63 லட்சம் பேர் பயணம்!

சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சிறப்பு அரசு பேருந்துகளில் இதுவரை 2.63 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஏப்ரல்1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,090 பேருந்துகள் என மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வாக்களித்த பிறகு சென்னை திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இன்று மாலை 4 வரை 6,578 பேருந்துகளில் 2,63,120, பயணிகள் வெளியூர்களுக்கு பயணித்துள்ளனர். மேலும் இதுவரை சிறப்பு பேருந்துகளில் செல்வதற்கு 37,955 பேர் முன்பதிவு செய்துள்ளனர். கொரோனா காலம் என்பதால் கடைசி நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்த்து, முன்கூட்டியே திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகள் பேருந்து நிலையம் செல்வதற்கு வசதியாக நாளை மற்றும் மறுநாள் வரை 230 சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு 95 பேருந்துகளும், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்துக்கு 74 பேருந்துகளும், பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு 41 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்துக்கு 13 பேருந்துகளும்,கே.கே நகர் பேருந்து நிலையத்துக்கு 7 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

சனி 3 ஏப் 2021