மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்: மருத்துவமனைக்கு உத்தரவு!

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்: மருத்துவமனைக்கு உத்தரவு!

கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்த வழக்கில், தமிழக அரசு, எம்ஜிஎம் மருத்துவமனை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ”கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் எனது தந்தை குமாரை அனுமதித்தேன். சிகிச்சைக்காக வெவ்வேறு தேதிகளில் 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலுத்தியும், உரிய சிகிச்சை வழங்காததால் ஆகஸ்ட் 3 ஆம் தேதி என் தந்தை இறந்து விட்டார்.

நாளொன்றுக்கு ரூ 15 ஆயிரம் தான் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தது மட்டுமில்லாமல், உடலை கொடுக்க வேண்டுமானால் மீண்டும் 2 லட்சத்து 44 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறினர். 10 நாள் சிகிச்சைக்கு மொத்தமாக 7 லட்சத்து 2 ஆயிரத்து 562 ரூபாய் வசூலித்தனர்.

அதுமட்டுமில்லாமல், தன் தந்தையின் மருத்துவ செலவை இன்சூரன்ஸ் மூலம் பெற, மருத்துவ விவரங்களை கேட்டதற்கு, தனது தந்தையின் மருத்துவ விவரங்களுக்கு பதிலாக வேறு ஒருவரின் சிகிச்சை விவரங்கள் வழங்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்ட போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனால் எம்ஜிஎம் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை, மருத்துவ கவுன்சில் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திரும்பி தர உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை இன்று(ஏப்ரல் 3) நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தார். அப்போது, இந்த வழக்கு குறித்து தமிழக அரசு, சென்னை மாவட்ட ஆட்சியர், எம்ஜிஎம். மருத்துவமனை, தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

சனி 3 ஏப் 2021