மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

அனல் காற்று வீசுவது தொடரும்!

அனல் காற்று வீசுவது தொடரும்!

தமிழகத்தில் வெப்பநிலை உயர்வால் அனல் காற்று வீசுவது தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் அளவு அதிகரித்துகொண்டே போகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக வெயில் உக்கிரத்தில் இருப்பதுபோல அதன் அளவுகள் பதிவாகி வருகிறது. நேற்றும் அதன் தாக்கம் அதிகரித்தே இருந்தது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 1) மட்டும் தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியது.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உட்பட 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 4 டிகிரியில் இருந்து 6 டிகிரி வரை உயரக்கூடும் என்றும், ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பத்துடன் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள், 12 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும், சுற்றி திரிவதை தவிர்க்குமாறும் ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

நேற்று (ஏப்ரல் 2) காஞ்சிபுரத்தில் 108 டிகிரி, தாம்பரத்தில் 107 டிகிரி, மீனம்பாக்கம், திருவள்ளூரில் தலா 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 3 ஏப் 2021