மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: பூசணிக்காய் தயிர்ப் பச்சடி!

ரிலாக்ஸ் டைம்: பூசணிக்காய் தயிர்ப் பச்சடி!

வெயிலைத் தணிக்க தயிர், மோர், பழச்சாறு மட்டுமல்ல; பச்சடி வகைகளும் உதவும். ரிலாக்ஸ் டைமில் இந்தப் பூசணிக்காய் தயிர்ப் பச்சடி செய்து சாப்பிட்டு புத்துணர்ச்சி பெறலாம்.

எப்படிச் செய்வது?

கால் கிலோ வெள்ளை பூசணிக்காயைத் தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். துருவிய பூசணிக்காயை மெல்லிய துணியில் வைத்துச் சாறு இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைத்துக்கொள்ளவும். துருவிய பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் அரை கப் தயிரைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் அரை டீஸ்பூன் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்த பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை கிளறி இறக்கி பூசணிக்காயில் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து சாப்பிடவும்.

சிறப்பு

இந்தப் பச்சடி வெயிலுக்கேற்றது என்பதுடன், பூசணியில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

சனி 3 ஏப் 2021