மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

சட்ட பல்கலை துணைவேந்தர் தேர்வு குழு : உயர் நீதிமன்றம் கருத்து!

சட்ட பல்கலை துணைவேந்தர் தேர்வு குழு : உயர் நீதிமன்றம் கருத்து!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்யும் குழு நியமனத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சந்திரபோஸ் என்பவர் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ”தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்களை பரிந்துரைக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் கமலா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தர்வேஷ் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவை தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் நியமித்து உத்தரவு பிறப்பித்தது.

பல்கலைக்கழகத்துடன் எந்தவித தொடர்பிலும் இல்லாதவர்களைதான் தேர்வுக் குழுவில் நியமிக்க வேண்டும் என்றிருக்கும்போது, 2004 முதல் 2007 வரை துணைவேந்தராக இருந்த தர்வேஷை குழுவில் சேர்த்திருப்பது தவறு. இதனால் துணைவேந்தர் தேர்வு பாரபட்சமாக இருக்கும் என்பதால் உத்தரவை ரத்து செய்து, அதற்கு தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று(ஏப்ரல் 2) தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒருநபரை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. அதனால், தேர்வு குழு நியமனத்தில் தலையிட எந்தவித அவசியமுமில்லை என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

சனி 3 ஏப் 2021