மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: சோயா பெப்பர் ஃப்ரை

கிச்சன் கீர்த்தனா: சோயா பெப்பர் ஃப்ரை

குழந்தைகளுக்குத் தினமும் சோயாவை உணவில் சேர்க்கப்படும்போது உடல் எடை,உயரம் மற்றும் நினைவாற்றல் கூடுவதுடன் ரத்த நிறமிகளின் எண்ணிக்கையும் உயரும். சோயா உணவு கால்ஷியம்,மக்னீஷியம், மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களைக் கொண்டிருப்பதால் பற்களை உறுதிப்படுத்துவதுடன் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது.

என்ன தேவை?

சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20

கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு

பச்சை மிளகாய் - ஒன்று

தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

முந்திரி - 6

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் அலசி வடியவிடவும். உருண்டைகளை இரண்டாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, நறுக்கிய சோயா உருண்டைகள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துச் சுருள வதக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: சில்லி சோயா

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

சனி 3 ஏப் 2021