மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

புதிய மருத்துவக் கல்லூரி கட்டடங்களை ஆய்வு செய்ய உத்தரவு!

புதிய மருத்துவக் கல்லூரி கட்டடங்களை ஆய்வு செய்ய உத்தரவு!

தமிழகத்தில் புதிதாக கட்டப்படும் 11 மருத்துவ கல்லூரிகளையும், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின் அடிப்படையில் கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில், 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கட்டப்படும் புதிய மருத்துவ கல்லூரிகள், மருத்துவ கவுன்சில் விதிகளின்படி கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(ஏப்ரல் 2) தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''மனுதாரர் மருத்துவ கவுன்சில் 2010ஆம் ஆண்டு விதிகளின்படி மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட வேண்டும் என கோரியுள்ளார். தற்போது மருத்துவ கவுன்சில் தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப்பட்டு, 2018 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதற்கான புதிய விதிகளை வகுத்துள்ளன. அதன் அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரிகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன'' என்று தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட வேண்டும் எனவும், புதிய விதிகளின்படி, மருத்துவ கல்லூரிகளின் கட்டுமானங்கள் அமைந்துள்ளதா என தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு அனுமதி கோரி விரைவில், தேசிய மருத்துவ ஆணையத்துக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

வினிதா

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

வெள்ளி 2 ஏப் 2021