மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

தவறான சிகிச்சையால் உயிரிழப்பு: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

தவறான சிகிச்சையால் உயிரிழப்பு: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிரிழந்த பெண்ணின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “ எனக்கும் செல்ல பிரியா என்பவருக்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் ஆனது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி என் மனைவிக்கும், இரண்டாவது மகனுக்கும் ஜலதோஷ பிரச்சனை காரணமாக மடகுப்பட்டி பகுதியிலுள்ள செந்தில் குமார் என்பவரது கிளீனிக்கிற்கு சிகிச்சைக்காக சென்றோம். அங்கு செல்ல பிரியாவிற்கு மருத்துவர் 3 ஊசிகளை செலுத்தினார். மூன்றாவது ஊசி போடும்போது செல்ல பிரியா மயக்கமடைந்தார். இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு என் மனைவியை அழைத்துச் சென்றோம்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்துவிட்டதாக கூறினார். மீண்டும் செந்தில் குமார் கிளீனிக்குக்கு வந்து பார்த்தபோது கிளீனிக் மூடப்பட்டிருந்தது.

செல்ல பிரியா உடற்கூராய்வின் அறிக்கைகள் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்து நான்கு வாரங்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, செல்ல பிரியா வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று(ஏப்ரல் 1) விசாரணை செய்த நீதிபதி தாரணி, தவறான மருத்துவம் அளிக்கப்பட்டதால் இறந்த பெண்ணின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு குறித்து குற்றப்பத்திரிகையை மூன்று மாதத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 2 ஏப் 2021