பணம் பறிமுதல் செய்யப்படுவதில் சென்னை முதலிடம்!

public

உரிய ஆவணங்களின்றி பணம் பறிமுதல் செய்யப்பட்ட புகாரில் சென்னையில் அதிகபட்சமாக 42.78 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று(ஏப்ரல் 1) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், ”தமிழகத்தில், இதுவரை 3 லட்சத்து 46 ஆயிரத்து 519 தபால் வாக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 350 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குகள் 92 ,559 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் 30,894 பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மே 2 ஆம் தேதி வரையும், 80 வயதுக்குட்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஏப்ரல் 5 ஆம் தேதி வரையும், தபால் வாக்குகள் செலுத்தலாம்.

சிவிஜில் செயலி மூலம் நேற்று 4 ஆயிரத்து 557 புகார்கள் வந்துள்ளன. இதில் 153 பணப்பட்டுவாடா புகார், 96 கூப்பன்கள் வழங்கப்பட்ட புகார்கள் அடங்கும். தேர்தல் விதிமீறல் தொடர்பாக பிப்ரவரி 24 முதல் மார்ச் 31 தேதி வரை 44 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறை அதிகளவிலான மக்கள் வாக்களிக்க ஆர்வமாக இருப்பதால், கொரோனா காரணமாக வாக்குகள் குறைய வாய்பில்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 24 தனிநபர் பாதுகாப்பு கவச உடை தயார் நிலையில் வைக்கப்படும். கொரோனா தொற்று காலம் என்பதால் இந்த முறை கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், தேர்தல் நடத்துவதற்கான செலவும் சுமார் 700 கோடி ரூபாய் வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுகாதாரத்துறையில் தேர்தல் பணிக்காக 54.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று வரை, உரிய ஆவணங்களின்றி பணம் பறிமுதல் செய்யப்பட்ட புகாரில் சென்னையில் அதிகபட்சமாக 42.78 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கடுத்தபடியாக, சேலமும், மூன்றாவது இடத்தில் கரூரும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

*வினிதா*

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *