மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

திருப்பதி: தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு!

திருப்பதி: தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக திருப்பதியில் சுவாமி தரிசன இலவச டிக்கெட் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலைக்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பின் அளவு அதிகரித்து வருவதால் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய விதிமுறைகளை நேற்று முன்தினம் திடீரென்று அமல்படுத்தியது. அதன்படி, தரிசன டிக்கெட் பெற்று நடைபாதை மார்க்கத்தில் திருமலைக்கு வர விரும்புபவர்கள் 24 மணி நேரத்துக்கு முன்பே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அடுத்த நாளுக்கான தரிசன டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்கள் மதியம் 1:00 மணிக்கு மேல் மட்டுமே வாகனங்கள் வாயிலாக திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால், சோதனைச்சாவடியில் வாகனங்கள் வரிசையில் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருமலையில் உள்ள அன்னமயப்பவனில் கூடுதல் தலைமை செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேற்று (மார்ச் 31) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோயில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. எனவே தினசரி வழங்கப்படும் சுவாமி தரிசன இலவச டிக்கெட் 25,000இல் இருந்து 15,000 ஆக குறைக்கப்படுகிறது” என்றார்.

அதே நேரத்தில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்று தீர்ந்துவிட்டால் வரும் மே மற்றும் ஜூன் மாதத்தில்தான் அதுகுறித்து முடிவு சொல்ல இயலும். சுப்ரபாதம், அர்ச்சனை மற்றும் ஆர்ஜித சேவை தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

காய்ச்சல் மற்றும் சளி அறிகுறி உள்ள பக்தர்கள், திருப்பதி வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தரிசனம் முடிந்த பக்தர்கள், உடனடியாக ஊர் திரும்பவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நடவடிக்கையால் தொடர்ந்து மூன்று தினங்கள்... வெள்ளிக்கிழமை (புனித வெள்ளி), சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்கள் என்பதால் திருப்பதிக்குச் செல்ல திட்டமிட்டிருந்த பக்தர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளவார்கள் என்று தெரிகிறது.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வியாழன் 1 ஏப் 2021