மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

தமிழகத்துக்கு ரூ.3,233 கோடி ஜிஎஸ்டி தொகை!

தமிழகத்துக்கு ரூ.3,233 கோடி ஜிஎஸ்டி தொகை!

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.14,000 கோடி உட்பட மொத்தம் ரூ.30,000 கோடியை மத்திய அரசு நேற்று (மார்ச் 31) விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.3,233 கோடி ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையை அமல்படுத்தும் வகையில் கடந்த 2017 ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. இந்த வரி மூன்று விதமாக, அதாவது மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST), மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST), மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST) என்கிற அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது.

இதில், எஸ்ஜிஎஸ்டி வரி முழுவதும் மாநில வருவாயில் வந்து சேரும். அதே நேரத்தில் சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி வருவாய் மத்திய அரசு தொகுப்புக்குச் சென்று விடும். மத்திய அரசு தொகுப்புக்குச் செல்லும். இந்த வருவாய் பின்னர் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.14,000 கோடி உட்பட மொத்தம் ரூ.30,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதில் தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி (CGST) இழப்பீடாக 2,192 கோடியே 94 லட்சமும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) தொகையாக ரூ1,041 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 1 ஏப் 2021