மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

பரப்புரையினால் போக்குவரத்துக்கு தடை இருக்கக்கூடாது!

பரப்புரையினால் போக்குவரத்துக்கு தடை இருக்கக்கூடாது!

தேர்தல் பரப்புரையின்போது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் போக்குவரத்தைத் தடை செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ”தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பிரச்சாரத்திற்காக முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செல்லும் இடங்களில் போக்குவரத்து தடைப்படுகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம் ஆகிய இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மதுபானக் கடை, திரையரங்கம், மால் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. பரப்புரையின்போது, அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில்லை. பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்காமல் பரப்புரைகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை இன்று(ஏப்ரல் 1) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது, பரப்புரையின்போது முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவித தடையும் செய்யக்கூடாது என்றும், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரும்போதுதான் உரிய போக்குவரத்து தடைகளை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக காவல்துறை டிஜிபி மற்றும் ஆணையர்களுக்கு தேர்தல் ஆணையம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வினிதா

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

வியாழன் 1 ஏப் 2021