மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

விடுமுறை நாட்களிலும் கொரோனா தடுப்பூசி!

விடுமுறை நாட்களிலும் கொரோனா தடுப்பூசி!

ஏப்ரல் மாதத்தில் அரசு மற்றும் தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களில் விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் எட்டு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் , 72,330 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டதில், 84.61 சதவிகிதம் பேர் எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

அதனால், கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று(ஏப்ரல் 1) 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமாக காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கூடுதல் எண்ணிக்கையில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதனால், மாநில அரசுகள் அதற்கு ஏற்றவகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஏப்ரல் மாதம் முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களில் விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவதை மாநிலங்கள் வேகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வியாழன் 1 ஏப் 2021