மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

ரூ.379.90 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!

ரூ.379.90 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!

தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.379.90 கோடி மதிப்பிலான பொருட்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2021சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டநாள் முதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 3பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு அமைத்து வாகன சோதனை நடத்தப்படும். உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை இவர்கள் பறிமுதல் செய்வார்கள் பறிமுதல் செய்யப்பட்டவை உரிய ஆவணங்கள் வழங்கி சரிபார்த்து சரியாக இருந்தால் பறிமுதல் செய்த பணம் பொருள் திருப்பி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

தற்போது வரை 379.30 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 2014 லோக்சபா தேர்தலில் 76.86 கோடி ரூபாயும், 2016 சட்டசபை தேர்தலில் 139.90 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அதிகபட்சமாக 952.01 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது நடந்து வரும் சட்டசபை பொதுத் தேர்தலில்,மார்ச் 30 வரை 184.55 கோடி ரூபாய் ரொக்கம் உட்பட 379.30 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 514.06 கிலோ தங்கம்; 655.39 கிலோ வெள்ளி 2.11 லட்சம் லிட்டர் மதுபானம் மற்றும் பொருட்கள் அடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை நகைகடைகளுக்கு வியாபாரம் செய்ய கொண்டு செல்லப்பட்டதும், பெரும்பாலான பணம் ஏடிஎம் மையங்களுக்கும், வியாபாரிகள் வர்த்தகரீதியாக கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-சக்தி பரமசிவன்

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வியாழன் 1 ஏப் 2021