மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

வட்டி விகித குறைப்பு: நேற்று அறிவிப்பு, இன்று வாபஸ்!

வட்டி விகித குறைப்பு: நேற்று அறிவிப்பு, இன்று வாபஸ்!

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகித குறைப்பை திரும்ப பெறுவதாகவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள வட்டி விகிதம் தொடரும் எனவும் மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சகம் நேற்று(மார்ச் 31) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாகவும், பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 7.1 சதவிகிதத்திலிருந்து 6.4 சதவிகிதமாக குறைக்கப்படும்.

ஓராண்டுக்கான வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 5.5சதவிகிதத்திலிருந்து 4.4 சதவிகிதமாகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவிகிதத்திலிருந்து 6.5 சதவிகிதமாக குறைக்கப்படும்.

தேசிய சேமிப்பு பத்திரங்கள் (என்எஸ்சி) மீதான வட்டி 6.8-5.9 சதவிகிதமாகவும், கிசான் விகாஸ் பத்திரம் மீதான வட்டி 6.9-6.2 சதவிகிதமாகவும், சுகன்ய சம்ரிதி யோஜனா திட்டத்துக்கான வட்டி 7.6-6.9 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 1974 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, அதாவது கடந்த 46 ஆண்டுகளில் வட்டி விகிதம் மிகவும் குறைக்கப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித குறைப்பு அறிவிப்பை திரும்ப பெறுவதாக இன்று(ஏப்ரல் 1) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிபிஎஃப், வருங்கால வைப்பு, ஓராண்டு கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டி விகிதம் குறைக்கப்பட்டது திரும்ப பெறப்படுகிறது. மேற்பார்வை மூலம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் திரும்பப் பெறப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

வட்டி விகித குறைப்பு நேற்று அறிவிக்கப்பட்டு, இன்று வாபஸ் பெறபட்டதால், இதுகுறித்து பலரின் மனதிலும் கேள்விகள் எழுந்துள்ளது. இதுகுறித்து பிரியங்கா காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ``இந்தத் திடீர் பின்வாங்கலுக்கு காரணம் துறையின் அஜாக்கிரதையா அல்லது தேர்தல்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வியாழன் 1 ஏப் 2021