மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

பண பரிமாற்ற செயலிகளுக்கு தடையா?

பண பரிமாற்ற செயலிகளுக்கு தடையா?

ஏப்ரல் 6ஆம் தேதி வரை கூகுள் பே உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவதற்காக, அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, பணபரிமாற்ற செயலிகள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாகவும் புகார் வருகின்றது. உறுதிப்படுத்தப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பண பட்டுவாடாவைத் தடுக்க கண்காணிப்பு குழுக்களும் அதிகபடுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற விதிமீறல்களுக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி வரை பணபரிமாற்றம் செய்ய பயன்படும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் “ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு அமேசான், பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் பணம் பட்டுவாடா செய்யும் முயற்சி நடைபெறுகிறது. எனவே பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 6ஆம் தேதி வரை பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் தடை விதிக்காவிட்டால் நீதிமன்றத்திற்கு செல்வேன்” என தெரிவித்துள்ளார்.

கூடுதல் போலீசார்

தமிழ்நாடு தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு சட்டம் ஒழுங்கு காவல் துறையினருடன் பல்வேறு காவல் பிரிவுகளிலிருந்து 4,495 காவலர்களைக் கூடுதலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த காவல் துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வியாழன் 1 ஏப் 2021