மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

பள்ளிகள் மூடிய பிறகும் மாணவர்களை துரத்தும் கொரோனா!

பள்ளிகள் மூடிய பிறகும் மாணவர்களை துரத்தும் கொரோனா!

தஞ்சையில் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கும், இரண்டு ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட மோசமாக இருக்கிறது என்பதை தினமும் வெளியாகும் பாதிப்பு நிலவரம் சுட்டிக் காட்டுகிறது.

இந்தியளவில் நேற்று 53 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு, இன்று 72,330 ஆக உயர்ந்துள்ளது. 459 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 2579 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 19 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 969 பேருக்கும், கோவையில் 273 பேருக்கும், செங்கல்பட்டில் 250 பேருக்கும், திருவாரூரில் 130 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 98 பேருக்கும், எட்டு மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்திலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று 11 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 7, செங்கல்பட்டில் 3, நாகபட்டினத்தில் 2. கோவையில் 7 , கடலூர், திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

ஒருபுறம் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் வகையில் மறுபுறம் தடுப்பூசி போடுவதை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று வரை 6.4 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், 3 கோடி பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 76.7 லட்சம் பேர் இணை நோய் உள்ளவர்கள். 92.6 லட்சம் பேர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டு கொண்டவர்கள்.

இந்நிலையில், இன்று(ஏப்ரல் 1) 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாத அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் புதிதாக தொடங்கப்பட்ட 1,150 மினி கிளினிக்களில் 700 கிளினிக் உள்பட 5 ஆயிரத்து 117 தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தஞ்சையில் புதிதாக ஆக்சிலியம் பள்ளியில் 8 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 230 பள்ளி மாணவர்களில் 203 பேர் குணமடைந்தனர்.

வினிதா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

வியாழன் 1 ஏப் 2021