மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: செட்டிநாட்டு கேரட் குழிப்பணியாரம்!

ரிலாக்ஸ் டைம்: செட்டிநாட்டு கேரட் குழிப்பணியாரம்!

பணியாரம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இந்த செட்டிநாட்டு கேரட் குழிப்பணியாரத்தை வீட்டிலேயே செய்து ரிலாக்ஸ் டைமில் பரிமாறலாம்/

எப்படிச் செய்வது?

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு டீஸ்பூன் உளுந்து, ஒரு காய்ந்த மிளகாயைக் கிள்ளி சேர்த்து தாளிக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பின்னர் இரண்டு கப் இட்லி மாவுடன் தாளித்த கலவையைச் சேர்த்து கலக்கவும். இதனுடன் துருவிய கேரட் ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவும். கடைசியாக, பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் தடவி, மாவை ஊற்றி அதன் மேல் கேரட் துருவலை தூவி இரண்டு புறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால் சுவையான செட்டிநாட்டு கேரட் குழிப்பணியாரம் தயார்.

சிறப்பு

சத்தான இந்தக் குழிப்பணியாரம் அனைவருக்கும் ஏற்றது. மாலை நேரத்துக்கேற்ற சுவையான சிற்றுண்டியும்கூட.

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வியாழன் 1 ஏப் 2021