மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

பணியிட மாற்றம்: அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்!

பணியிட மாற்றம்: அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் மத்திய, மேற்கு மண்டலங்களின் ஐஜிக்கள், கோவை எஸ்பி ஆகியோரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறும் காவல் துறை அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது தேர்தல் ஆணையம் .

பணப்பட்டுவாடாவை தடுக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்புத் தேர்தல் பார்வையாளர்கள் நடத்திய விசாரணையில் மேற்கு மண்டல ஐஜி தினகரன், மத்திய மண்டல ஐஜி ஜெயராம், கோவை மாவட்ட எஸ்பி அருள் அரசு ஆகியோர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதை உறுதிப்படுத்தினர்.

இவர்களை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்ற வேண்டும் என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூக்கு, தேர்தல் பார்வையாளர்கள் அறிக்கை அளித்தனர். அதன்படி, மூன்று காவல்துறை உயரதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூக்கு நேற்று (மார்ச் 31) உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில், குற்றச்சாட்டுக்கு உள்ளான மேற்கு மண்டல ஐஜி தினகரன், மத்திய மண்டல ஐஜி ஜெயராம், கோவை மாவட்ட எஸ்பி அருள் அரசு ஆகியோரை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. மூன்று பேரையும் பணியிலிருந்து விடுவிடுத்த தேர்தல் ஆணையம், இவர்களுக்குப் பதிலாக மேற்கு மண்டல ஐஜியாக அமல் ராய், மத்திய மண்டல ஐஜியாக தீபக் டாமர், கோவை புறநகர் எஸ்பியாக செல்வ நாகரத்தினம் ஆகியோரை நியமினம் செய்து உத்தரவிட்டுள்ளது. புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று அதிகாரிகளும் இன்று பிற்பகல் 1 மணிக்குள் பதவி ஏற்க வேண்டும் என்றும், ஐஜிக்கள் தினகரன், ஜெயராம், எஸ்பி அருள் அரசு ஆகிய மூன்று பேரையும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அவர்களுக்கு வேறு பதவி வழங்க கூடாது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி பணப்பட்டுவாடா வழக்கு தொடர்பாக நேற்று திருச்சி மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக, நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்த அருணை, திருச்சி மாநகரக் காவல் ஆணையராக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை திருச்சி மாவட்டத்தில் மட்டும், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மத்திய மண்டல ஐஜி, காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரையும் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வியாழன் 1 ஏப் 2021