மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

சிலிண்டர் விலை குறைப்பு!

சிலிண்டர் விலை குறைப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது எனவும், இந்த விலை மாற்றம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அங்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையையும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.125 ஆக உயர்த்தப்பட்டது. இதனால், மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில், தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ.10 குறைக்கப்படுகிறது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை நிர்ணயம் அமலுக்கு வந்துள்ளதால், ரூ.835 ஆக இருந்த சிலிண்டர் விலை, நாளை முதல் ரூ.825க்கு சிலிண்டர் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு 61 பைசா வரை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிலிண்டர் விலை குறைக்கப்பட்டாலும், விலையை ஏற்றும்போது அதிகமாகவும், குறைக்கும்போது 10 ரூபாயாக குறைப்பது நியாயமில்லை என இல்லதரசிகள் தெரிவித்துள்ளனர்.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

வியாழன் 1 ஏப் 2021