மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: சோயா கட்லெட்

கிச்சன் கீர்த்தனா: சோயா கட்லெட்

தாவர உணவுகளில் அசைவத்துக்கு இணையான அதிக புரதம்கொண்ட ஒரே பொருள் சோயா. கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு போன்றவற்றில் 100 கிராமுக்கு 20 முதல் 25 கிராம் அளவு புரதம் இருக்கிறது என்றால், சோயாவில் அது 40 சதவிகிதம். இரும்புச்சத்தும் மற்ற பருப்புகளைவிட, சோயாவில் சற்றே அதிகம். அதாவது, 10.4 சதவிகிதம். இப்படிப்பட்ட சோயாவில் இன்று கட்லெட் செய்து அசத்துங்கள்.

என்ன தேவை?

சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20

உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்)

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பிரெட் தூள் - கால் கப்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். இதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்துப் பிசையவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சீரகம் தாளிக்கவும். அதனுடன் சோயா கலவையைச் சேர்த்துச் சுருள வதக்கி இறக்கவும். ஆறியவுடன் சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, விருப்பமான வடிவில் செய்து, பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு கட்லெட்டுகளை வைத்து, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

நேற்றைய ஸ்பெஷல்: சோயா பருப்பு வடை

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வியாழன் 1 ஏப் 2021