மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

வெளிநாடுகளில் வேலை: இரண்டாவது இடத்தில் தமிழர்கள்!

வெளிநாடுகளில் வேலை: இரண்டாவது இடத்தில் தமிழர்கள்!

இந்தியாவில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் சென்றவர்களில் 10இல் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த வகையில் தமிழர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி தமிழகத்திலிருந்து கடந்த ஜனவரி 2016 முதல் மார்ச் 2021 வரை ஐந்து ஆண்டுகள் காலகட்டத்தில் 13.1 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அந்த வகையில் நாட்டிலேயே அதிகமாக வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் சென்ற மாநிலத்தவர்களாக கேரளத்தைச் சேர்ந்தவர்கள் முதல் இடத்தையும், தமிழர்கள் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஜனவரி 2016 மற்றும் மார்ச் 2021ஆம் ஆண்டுகளுக்கிடையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து 1.3 கோடி பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் சென்றிருப்பதாகவும், இதில் கேரளத்தவர் 19 லட்சம் பேர் என்றும், தமிழர்கள் 13.1 லட்சம் பேர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த இரு மாநிலங்களின் பங்களிப்பு மட்டுமே 24 சதவிகிதமாக உள்ளது. மூன்றாவது இடத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. அங்கிருந்து 12.6 லட்சம் பேர் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இதே போல 44.3 லட்சம் பேர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா காலத்தில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 4.7 லட்சம் பேர் தமிழகத்துக்குத் திரும்பியிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

-ராஜ்

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

புதன் 31 மா 2021