மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

பிரச்சாரத்திற்கு கூடுதலாக 2 மணி நேரம்!

பிரச்சாரத்திற்கு கூடுதலாக  2 மணி நேரம்!

கடைசி நாள் பிரச்சாரத்தில் இந்தமுறை 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கி, மாலை 7 மணி வரை அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரம் செய்யலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இரவு, பகல் என்று ஓய்வே இல்லாமல், அனல் பறக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 4ஆம் தேதியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12 மணி முதல் 4 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறக்கூடிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை(ஏப்ரல் 4) மாலை 7 மணி வரை பிரச்சாரம் செய்யலாம். வழக்கமாக இறுதி நாளில் தேர்தல் பிரச்சாரம் மாலை 5 மணியுடன் முடியும். இந்த முறை 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கி, மாலை 7 மணி வரை அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இணையதளம் மூலம் பிரச்சாரம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள கட்டுப்பாடு அறையில் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கப்பட்டு வேட்பாளர்கள் பெயர்களுடன் தயார் செய்யும் பணிகள் முழுமையாக இன்று நிறைவடையும்.

திருச்சியில் காவலர்களுக்கு பண விநியோகம் செய்தது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள தரவுகளை வழங்கியுள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம்தான் எடுக்கும்.

கொரோனா தொற்றுள்ளவர்கள், அதற்கான சான்றிதழுடன், தங்கள் சொந்த வாகனத்தில் வந்து வாக்களிக்கலாம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

கடைசி நேர பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குக்கு பணம் கொடுத்ததாக 133 புகார்கள் வந்துள்ளன. அதில் உண்மைதன்மையுடன் இருந்த 57 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

வருமான வரித்துறை சார்பில் ரூ.66.47 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ரூ42.47 கோடி, சென்னையில் ரூ.36.73கோடி, திருப்பூரில் ரூ.14.02 கோடி, நெல்லையில் ரூ.13.39 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில்தான் குறைவான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

புதன் 31 மா 2021