மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

ஊரடங்கு: மாவட்ட நிர்வாகங்களே கட்டுப்பாடுகளை விதிக்கலாம்!

ஊரடங்கு: மாவட்ட நிர்வாகங்களே கட்டுப்பாடுகளை விதிக்கலாம்!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒவ்வொரு மாத இறுதியிலும், அடுத்த மாதத்திற்கான தளர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீடிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்களே கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர்த்து சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.

கொரோனா பரிசோதனைகளை அதிகபடுத்தவும், தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கட்டுப்பாட்டு பகுதியில் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து மற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு

ஏற்கனவே தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியைகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி

இன்று காலை வரை 6 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 353 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போட்டதில் தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் விவரங்களை மாநில சுகாதாரத்துறையினர் அரசின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராமாநிலத்தில் உள்ள மும்பை, புனே ஆகிய நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாசிக்கில் உள்ள சந்தைகளுக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயித்து நாசிக் நகராட்சி நிர்வாகம் உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் வெளியே வராவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

புதன் 31 மா 2021