மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சியை ஏன் தடை செய்யக் கூடாது?

இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சியை ஏன் தடை செய்யக் கூடாது?

மக்களை சோம்பேறியாக்கும் இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையம் ஏன் தடை செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று(மார்ச் 31) நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின்போது, கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளில் இலவச திட்டங்களே முன்னிலையில் இருக்கிறது. இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளை ஏன் தேர்தல் ஆணையம் தடை செய்யக் கூடாது? சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அரசியல் கட்சியினர் அளிக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சிகள் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா? என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

இலவச திட்டங்களை அறிவித்துவிட்டு, அதை நிறைவேற்றுவதற்காக கடன் வாங்குவதால், மாநிலத்தின் நிதிச்சுமை அதிகரிக்கிறது. பின்னர், நிதிச்சுமையை குறைக்க மதுபான கடைகள் அதிகரிக்கப்படுவதாக காரணம் காட்டப்படுகின்றது. இதை மக்கள் உணர வேண்டும். பிரியாணி, மதுபாட்டில் மற்றும் பணத்துக்கு வாக்குகளை விற்பனை செய்துவிட்டு, நல்ல அரசியல் தலைவர்களை, மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? என நீதிபதிகள் கூறினர்.

கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அரசியல் கட்சியினரால் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், நீதிபதிகளின் கேள்விகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

புதன் 31 மா 2021