மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

ஒரே தொகுதி: பயிற்சிக்கு வராத 219 பேருக்கு நோட்டீஸ்!

ஒரே தொகுதி: பயிற்சிக்கு வராத 219 பேருக்கு நோட்டீஸ்!

சோழிங்கநல்லூர் தொகுதி தேர்தல் பணிக்கான பயிற்சியில் பங்கேற்காத, 219 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்துடன் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவு தினத்தில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் பல கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில் கலந்து கொள்பவர்களுக்கு தேர்தல் தினத்தில் எவ்வாறு பணி செய்ய வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை எப்படி கையாளுவது என்பது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து வீடியோ காட்சிகள் மூலம் விளக்கப்படுகிறது.

ஆனால், தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்தவர்களுக்கு சரியான நேரத்தில் மதிய உணவு வழங்காதது, அவர்களைப் பூட்டிய கட்டடத்தில்வைத்து பயிற்சி வகுப்புகள் நடத்துவது போன்ற குளறுபடிகள் தொடர்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் வகுப்பைப் புறக்கணித்து வருகின்றனர். மேலும் ஆசிரியர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நடக்க உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி சட்டசபைத் தேர்தலில் பணிபுரிய 3,567 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான தேர்தல் பணிக்கான இரண்டாம்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், எந்தவித அறிவிப்பும் இன்றி 219 பேர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. அதற்கான காரணம் கேட்டு குறிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய பதில் அளிக்காதபட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 31 மா 2021