மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

கொரோனா இறப்பு அதிகரிப்பு, ஆனால் இறப்பு விகிதம்……!

கொரோனா இறப்பு அதிகரிப்பு, ஆனால் இறப்பு விகிதம்……!

சமுதாய தடுப்பூசியான முகக்கவசத்தை அணிந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் 354 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் 16 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இன்று(மார்ச் 31) சென்னை கிண்டியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கொரோனா பரவலைத் தடுக்க அனைவரும் தயவு செய்து முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா ஏறுமுகத்தில் செல்கிறது. கோயில் நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முகக்கவசம் அணிந்து கொண்டு கலந்து கொள்ளுங்கள். திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கொரோனா காலத்தில் போர் வீரர்கள் போல் மருத்துவ பணியாளர்கள் சேவையாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆனாலும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் 29.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2ல் மேலும் 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வர உள்ளன.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 3 சதவிகிதமாக இருந்த கொரோனா பாதிப்பு , தற்போது நான்கரை சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் .600க்கும் மேற்பட்ட இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 14 நாட்களுக்குப் பின்னரே எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதால், சமுதாய தடுப்பூசியான முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். தடுப்பூசி போட்ட பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் பதற்றமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாதிப்பு

சென்னை அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜோசப் சாமுவேல் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது , கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியின் 8 ஆசிரியர்களுக்கும்,19 பொதுமக்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 27 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மனைவி சென்னம்மாவும் நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம். கடந்த சில நாட்களாக எங்களுடன் தொடர்பு கொண்ட அனைவருமே தங்களை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கட்சி ஊழியர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

புதன் 31 மா 2021