மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

ரிலாக்ஸ் டைம்: மிளகு உருண்டை!

ரிலாக்ஸ் டைம்: மிளகு உருண்டை!

உடல் சோர்வாக இருக்கும்போது சூடாக மிளகு ரசம் ஒரு டம்ளர் குடித்தால் உடலுக்கு உடனடியாக பலம் கிடைக்கும். மிளகு உணவுக்கு மட்டும் அல்லாமல் கை வைத்தியத்துக்கும் பயன்படுத்தலாம். கொரோனா பரவல் அதிகரித்துவரும் தற்போதைய சூழலில் ரிலாக்ஸ் டைமில் இந்த மிளகு உருண்டை செய்து சாப்பிட்டு வைரஸை விரட்டலாம்.

எப்படிச் செய்வது?

50 கிராம் மிளகை வெறும் வாணலியில் வறுக்கவும். அடுப்பை மிதமாக எரியவிட்டு, மிளகு படபடவென்று வெடித்தவுடன் இறக்கவும். 100 கிராம் வெல்லத்தைப் பொடி செய்து சிறிதளவு நீர் ஊற்றிக் காய்ச்சவும். வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டவும். இதனால் வெல்லத்தில் உள்ள கழிவு தங்கிவிடும். பிறகு மீண்டும் இதை அடுப்பில் வைத்து வெல்லப்பாகு, பாகு பதத்தில் வந்தவுடன் பொடி செய்த மிளகுத்தூள், இரண்டு டீஸ்பூன் நெய், அரை டீஸ்பூன் தேன் சேர்த்து லேகியம்போல் கிளறி, சிறிய உருண்டைகளாகச் செய்து கொள்ளவும். இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்துவைத்தால் பல நாள்கள் வரை பயன்படுத்தலாம்.

சிறப்பு

உடல் அசதியாக இருக்கும்போது வறட்டு இருமல் வரும்போது இரண்டு மிளகு உருண்டைகளை வாயில் போட்டுக்கொண்டால் உடனடி பலன் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 31 மா 2021