மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

வைகை அணை: பொதுப்பணி செயலருக்கு உத்தரவு!

வைகை அணை: பொதுப்பணி செயலருக்கு உத்தரவு!

வைகை அணையை முழுமையாகத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில், பொதுப்பணித் துறைச் செயலர், மதுரை, தேனி மாவட்டங்களின் ஆட்சியர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், “ தேனி மாவட்டத்தில் 1958 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த வைகை அணை இதுநாள் வரை தூர்வாரப்படவில்லை. இதனால் அணையில் அடித்துவரப்பட்ட மணல் சுமார் 20 அடி வரை உள்ளதால் தண்ணீர் கொள்ளளவு குறைந்துவருகிறது.

வைகை அணை தூர்வாரப்படும் என்று அவ்வப்போது அரசு அறிவிப்பு செய்து இதுவரை 800 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் அறிவிப்புகளாகவே உள்ளன. அணையை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட ஐந்து மாவட்டங்களின் வேளாண்மைக்கும், குடிநீர் ஆதாரத்திற்கும், இந்த அணையின் நீரைதான் நம்பியுள்ளனர்.

மேலும் வைகை அணைக்கு வரும் நீர்வரத்துப் பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்பு, மணல் தூர்வாரப்படாததான் காரணமாகத் தண்ணீரின் கொள்ளளவு குறைந்துகொண்டே வருகின்றது. இது மட்டுமல்லாமல் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைகை அணையிலிருந்து மதுரை, தென் மாவட்டங்களுக்கு வரும் பகுதிகளில் மின் மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் திருடப்பட்டுவருகிறது. இதனால் இந்தப் பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால், வைகை அணையை முழுமையாகத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர்த் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று(மார்ச் 30) நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறைச் செயலர், தேனி, மதுரை மாவட்டங்களின் ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

வினிதா

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

புதன் 31 மா 2021